- வணிகம்

இந்தியாவில் பிரீமியம் விலையில் அறிமுகமான இரு கவாசகி மாடல்கள்

கவாசகி நிறுவனத்தின் இரு மோட்டார்சைக்கிள் மாடல்கள் இந்திய சந்தையில் பிரீமியம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.

கவாசகி இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் Z H2 மற்றும் Z H2 SE என இரு மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இவற்றின் விலை முறையே ரூ. 21.90 லட்சம் மற்றும் ரூ. 25.90 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன.

சூப்பர்சார்ஜ் செய்யப்பட்ட ரோட்ஸ்டர் மோட்டார்சைக்கிள் புல் எல்இடி லைட்டிங், ப்ளூடூத் சார்ந்து இயங்கும் 4.3-இன்ச் கலர் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளிட்ட அம்சங்களை கொண்டுள்ளது.

புது மோட்டார்சைக்கிள் 998சிசி, இன்-லைன் 4 சிலிண்டர், லிக்விட் கூல்டு, DOHC, 16-வால்வ், சூப்பர்சார்ஜ் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 197.2 பிஹெச்பி பவர் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

கவாசகி Z H2 மாடல் டிரெலிஸ் பிரேம் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த மாடலில் டிராக்ஷன் கண்ட்ரோல், மூன்றுவித ரைடிங் மோட்கள், குவிக்-ஷிப்டர் மற்றும் குரூயிஸ் கண்ட்ரோல் சிஸ்டம் வழங்கப்படுகிறது.

Leave a Reply