- செய்திகள், வணிகம்

இந்தியாவில் உருக்கு தேவை 5 சதவீதம் அதிகரிக்கும்

உலக ஸ்டீல் சங்கம் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
உலக அளவில் உருக்கு உற்பத்தியில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. இந்த 2016-ம் ஆண்டில் இந்தியாவில் உருக்கு பொருட்கள் தேவை 5.4 சதவீதம் அதிகரித்து 8.38 கோடி டன்னாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை குறைவாக உள்ளதும், இந்திய அரசு மேற்கொண்டு வரும் சீர்திருத்த நடவடிக்கைகளும், கொள்கைகளும் அடிப்படை கட்டமைப்பு, தயாரிப்பு துறையின் உற்பத்தியை அதிகரிக்கும் என்பதே இதன் பின்னணியில் உள்ளது. மேலும் அடுத்த ஆண்டிலும் இந்தியாவின் உருக்கு பொருட்களுக்கான தேவை மீண்டும் 5.4 சதவீதம் வளர்ச்சி கண்டு 8.83 கோடி டன்னாக உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply