- செய்திகள், விளையாட்டு

இந்தியாவில் இந்த ஆண்டில் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி நியூசிலாந்து அணியுடன் நடக்கிறது

புதுடெல்லி, ஏப்.22:-

இந்தியாவில் இந்த ஆண்டின் கடைசியில் நியூசிலாந்து அணியுடன் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர் அனுராக் தாகுர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் உள்ள பிசிசிஐ தலைமையகத்தில் செய்தியாளர்களை தாகுர் சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்த ஆண்டின் இறுதியில் நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறது என்றார். அப்போது இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் பகலிரவு போட்டியாக இருக்கும் என்று குறிப்பிட்டார். இந்தப் போட்டியில் இளஞ்சிவப்பு நிற பந்து பயன்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக நடைபெறும் துலீப் டிராபி கோப்பை போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டிக்கான ஒத்திகையாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

துலீப் டிராபியில் இந்தியாவின் அனைத்து முன்னிலை வீரர்களும் பங்கேற்பார்கள் என்பதால் அந்தப் போட்டியின் மூலம் பகலிரவு போட்டி குறித்து ஒரு ஐடியா கிடைக்கும் என்றும் அது கிரிக்கெட் வாரியத்துக்கு தெரிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். அதன் அடிப்படையில் டெஸ்ட் போட்டியை நடத்துவதற்கு திட்டம் வகுக்கப்படும் என்றும் தாகுர் குறிப்பிட்டார்.

Leave a Reply