- செய்திகள், வணிகம்

இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகத்தில் களம் இறங்கும் ஆப்பிள்

ஐ-பேட், ஐ-போன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தனது சந்தையை விரிவுப்படுத்தும் நோக்கில் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நம் நாட்டில் ஒற்றை பிராண்டு சில்லரை விற்பனை கடைகள் திறக்கவும், ஆன்லைன் வர்த்தகத்தில் நேரடியாக களம் இறங்கவும் மத்திய தொழில் கொள்கை, மேம்பாட்டு வாரியத்திடம் ஒப்புதல் வேண்டி ஆப்பிள் இந்தியா நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
ஆப்பிள் நிறுவனத்திடம், மத்திய தொழில் கொள்கை, மேம்பாட்டு வாரியம் இது தொடர்பாக  சில கூடுதல் விவரங்களை கோரும் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Leave a Reply