- செய்திகள், வணிகம்

இந்தியப் பொருளாதாரம் ஸ்திரமாக இருக்கிறது

 

மூடிஸ் கருத்து
சர்வதேச கடன் தர நிர்ணய நிறுவனமான மூடிஸின் இன்வெஸ்டர் சர்வீஸ் அமைப்பின் துணைத் தலைவரும், மூத்த ஆய்வாளருமான ராகுல் கோஷ் கூறுகையில், “ அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டிவீத உயர்வு நிச்சயம் வளரும் பொருளாதாரத்தை பாதிக்கலாம். ஆனால், இந்தியாவைப் பொருத்தவரை, பொருளாதாரம் ஸ்திரத்தன்மையுடன், சவால்களையும் எதிர்கொள்ளும் நிலையில் இருக்கிறது. சீனப்பொருளாதாரத்தில் மந்தநிலை, பொருட்கள் விலை குறைவு, உலகப் பொருளாதாரச் சூழல் ஆகியவை வளரும் நாடுகளின் சந்தையை பாதிப்படையச் செய்யலாம்.

குறைவான நடப்புக் கணக்குப் பற்றாக்குறை, குறைவான வெளிக்கடன், பொருளாதார வளர்ச்சியை நோக்கிய நிலை ஆகியவை, இந்தியாவுக்கு சாதகமான நிலையாக இருக்கிறது. ஆதலால், பெரடல் வங்கியின் முடிவு இந்தியாவை பாதிக்க வாய்ப்பில்லை என்றார்.

Leave a Reply