- சென்னை, செய்திகள், மாவட்டச்செய்திகள்

இடைக்கால நிதிநிலை அறிக்கை தமிழக மக்களுக்கு ஆறுதல் அளிப்பதாக இல்லை கருணாநிதி அறிக்கை

சென்னை, பிப்.17-
விரக்தி மற்றும்ஏமாற்றத்தின் விளிம்பில் இருக்கும்  தமிழக மக்களுக்குகடுகளவேனும் ஆறுதல் அளிப்பதாக இடைக்கால நிதிநிலை அறிக்கை இல்லை என்று, கருணாநிதி கூறினார்.

இது தொடர்பாக, தி.மு.க.தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

நிதிப் பற்றாக்குறை
அ.தி.மு.க. ஆட்சியில்தமிழகத்தின்  வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள பெரும் பின்னடைவுக்குக் காரணிகளான  நிதிப் பற்றாக் குறையையும், தமிழ்நாடு அரசின் மொத்தக் கடனையும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா எவ்வாறு  குறைத்திருக்கிறார் என்று  முக்கியமான இந்தக் கட்டத்தில் பார்த்தால், 2015-2016ஆம் ஆண்டிற்கான நிதிப் பற்றாக்குறை  ரூ.31,829.19 கோடியாக இருக்கும்  என்று மதிப்பிடப்பட்டது,  இன்று 16-2-2016 சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால நிதி நிலை அறிக்கையில்,  நிதிப் பற்றாக்குறை ரூ 36,740.11 கோடி ரூபாய் அளவுக்கு உயரும் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.
2011-12-ம் ஆண்டு  இடைக்காலநிதி நிலை அறிக்கையில் 17,607.71 கோடி ரூபாய் அளவுக்கு நிதிப் பற்றாக்குறை இருந்தபோது, அதனைச் சுட்டிக்காட்டி ஜெயலலிதா, இது தான் கருணாநிதியின் 5 ஆண்டு காலச்சாதனை என்று அறிக்கை விடுத்தார்.  தற்போது 5 ஆண்டு காலத்தில் நிதிப்பற்றாக்குறையை 2 மடங்காக உயர்த்தியிருப்பதற்குப்பெயர் தான்  ஜெயலலிதாவின்  5 ஆண்டு கால சாதனையாஎன்று அவர் பாணியிலேயே கேட்கலாம் அல்லவா?

மொத்த கடன்

31-3-2011 அன்று  தமிழ்நாடு அரசின் மொத்தக்கடன்  1,01,541 கோடி ரூபாய் என்பதை ஜெயலலிதா தனது அறிக்கையிலே கூறி,  இது தான் கருணாநிதியின் 5 ஆண்டு கால சாதனை என்றாரே, இப்போதுதமிழ்நாடு அரசின் மொத்தக் கடனை எவ்வாறு குறைத்திருக்கிறார் என்று தெரியுமா?31-3-2017 அன்று  நிலுவையில் உள்ள பொதுக் கடன் என்று இந்த ஆண்டு இடைக்கால நிதி நிலை அறிக்கையிலே பக்கம் 79-ல்தெரிவித்துள்ள  தொகை 2,47,031 கோடி ரூபாய் என்றால் இந்தக் கடன் சுமை தான்  ஜெயலலிதாவின் 5 ஆண்டு காலச் சாதனையா?
ஆறுதல் அளிப்பதாக இல்லை
தங்கள் தங்கள் கோரிக்கைகளை முன் வைத்து, இந்த இடைக்கால நிதி நிலைஅறிக்கையில் ஏதாவது அறிவிப்புகள் வெளிவரும் என்று எதிர்பார்த்து போராட்டங்களில்  ஈடுபட்டிருந்த அரசு ஊழியர்கள் உள்ளிட்ட எந்தத் தரப்பினரின்கோரிக்கைக்கும் இந்த நிதி நிலை அறிக்கையிலே பதில் இல்லை. அ.தி.மு.க. ஆட்சியின்  இந்த இடைக்கால நிதி நிலைஅறிக்கையைப் புரட்டிப் பார்க்கும்போது,  5 ஆண்டு  வரலாற்றின் பக்கங்களைத் திரும்பிப் பார்ப்பதைப் போல   இருக்கிறது;  விரக்தி மற்றும் ஏமாற்றத்தின் விளிம்பில் இருக்கும்  தமிழக மக்களுக்கு கடுகளவேனும் ஆறுதல் அளிப்பதாக இல்லை.
இவ்வாறு கருணாநிதி கூறி உள்ளார்.

Leave a Reply