- செய்திகள், வணிகம்

ஆஸ்திரேலியா உள்பட மேலும் 37 நாடுகளுக்கு இ-சுற்றுலா விசா திட்டம் நீட்டிப்பு

புதுடெல்லி, பிப்.26:-
ஆஸ்திரேலியா, செக் குடியரசு, டென்மார்க் உள்பட மேலும் 37 நாடுகளுக்கு இ-சுற்றுலா விசா திட்டத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது. இது, இன்று முதல் அமலுக்கு வருகிறது.
2014 நவம்பர் 27-ந் தேதி இ-விசா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆன்லைனில் விசாவுக்கு விண்ணப்பித்து அதிலேயே இந்திய அரசு வழங்கிய அனுமதி சான்றிதழையும் டவுன்லோடு செய்து பிரிண்ட் அவுட் எடுத்து கொள்ளலாம். அவர்கள் இந்தியாவுக்கு வரும் போது இந்த பிரிண்ட் அவுட்டை குடியேற்ற அதிகாரிகளிடம் காண்பித்தால் போதும். இந்த இ-விசாவை பயன்படுத்தி நாட்டின் 16 விமான நிலையங்களில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து இறங்கலாம். இதுவரை இந்த சலுகை 113 நாடுகளுக்கு நம் நாடு வழங்கி இருந்தது.

தற்போது, ஆஸ்திரேலியா, டென்மார்க், கானா, கிரீஸ், செனகல் உள்பட  மேலும் 37 நாடுகளுக்கு இந்த சலுகை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் அறிமுகம் செய்தது முதல் இதுவரை 7.50 லட்சம் விசா வழங்கப்பட்டுள்ளது. தற்போது நாள் ஒன்றுக்கு சராசரியாக 3,500 ஆன்லைன் சுற்றுலா விசா வழங்கப்படுகிறது.

Leave a Reply