- செய்திகள், விளையாட்டு

ஆஸ்திரேலியாவுக்காக களமிறங்கும் இந்திய வீரர் ரியோ ஒலிம்பிக் போட்டியில்

மெல்போர்ன், ஏப். 27:-

பிரேசிலில் ஆகஸ்ட் மாதம் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்தப் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த வீரர், ஆஸ்திரேலியாவுக்காக களம் இறங்குகிறார்.

இந்தியாவின் ஹரியானா மாநிலம், கன்டா கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத் குமார் தையா. மல்யுத்த வீரரான வினோத் குமார் தையா ஆஸ்திரேலியாவில் 2010-ம் ஆண்டு குடியேறி, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அந்நாட்டு குடியுரிமை பெற்றார்.

இந்நிலையில், விக்டோரியா மாநிலம் சார்பில் பல்வேறு மல்யுத்தப் போட்டிகளில் பங்கேற்ற வினோத் குமார் 6 முறை தேசியஅளவில் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றுள்ளார். சமீபத்தில் அல்ஜீரியாவில் நடந்த ஆப்ரிக்கா-ஓஸ்னியா ஒலிம்பி தகுதிப்போட்டியில் கிரேக்க-ரோமன் பிரிவில் பங்கேற்ற வினோத் குமார் வெள்ளி வென்று, ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றார். இதையடுத்து, இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட வினோத்குமார், ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்தப்பிரிவில் ஆஸ்திரேலியாவுக்காக பங்கேற்கிறார்.

Leave a Reply