- சினிமா, செய்திகள்

ஆவிப்படத்தில் குத்துப்பாட்டுக்கு ஆடத் துடித்த ராய்லட்சுமி

ஸ்ரீகாந்த்-ராய்லட்சுமி நடிக்க, வடிவுடையான் இயக்கத்தில் வளர்ந்து திரைக்கு வரத் தயாராக இருக்கும் `சவுகார்பேட்டை'  ரசிகர்களுக்கு இன்னொரு ஆவி ஸ்பெஷல் படம்.
படத்தில் ஆவியாகவும், மந்திரவாதியாகவும் இரண்டு வேடத்தில் வருகிறார், நடிகர் ஸ்ரீகாந்த். அவருக்கு ஜோடியாக அதாவது இன்னொரு ஆவியாக வருகிறார், ராய்லட்சுமி.
பாதிப் படத்தை எரியும் பிணங்களுக்கு நடுவே நிஜ சுடுகாட்டில் எடுத்து நடிப்பவர்களையே கூட பயமுறுத்தியிருக்கிறார்கள். இதில் அதிகம் பயந்து போனவர்கள் நடிகர் சுமனும், நடிகை வடிவுக்கரசியும். இந்த சூழலில் படத்தில் ஒரு குத்துப்பாட்டுக்கு ஆடியே தீருவேன் என்று உரிமையுடன் அடம் பிடித்திருக்கிறார், ராய்லட்சுமி. ஆனால் ஆவிக் கதையில் ஆட்டத்துக்கு இடமில்லை என்று ராய்லட்சுமியின் கோரிக்கையை கடைசி வரை கண்டு கொள்ளாமலே இருந்து விட்டாராம், இயக்குனர் வடிவுடையான்.
கிளைமாக்ஸ் காட்சியில் நாயகி ராய்லட்சுமி 30 அடி உயரத்தில் இருந்து குதிக்க வேண்டும். டைரக்டர் குதிக்கச் சொன்னதும் கொஞ்சமும் யோசிக்கமல் குதித்து யூனிட்டையே அந்த நள்ளிரவு நேரத்திலும் வியர்க்க வைத்திருக்கிறார், லட்சுமிராய்.
“பேய்க்கதை சம்பந்தப்பட்ட இந்த படம் எனக்கும் நிச்சயம் புது அனுபவம். நடிப்பிலும் பேசப்படுவேன்'' என்கிறார், ஸ்ரீகாந்த்.
`பேய்க்கதையில் நடித்த உங்களுக்கு பேய் நம்பிக்கை உண்டா?'
ஸ்ரீகாந்த்திடம் இந்த ஒரு கேள்வியை மட்டும் முன்வைத்தோம். “எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. பேய் உண்டு என்றும் நம்புகிறேன். அதற்கு படப்பிடிப்பு நடந்த இடமே சாட்சி. கிராமத்தை விட்டே வெளியே வராத ஒரு பெண்ணுக்கு பேய் பிடித்த பிறகு அவள் பேசியது ஒரியா மொழியில். அந்த மொழியைப் பற்றி கொஞ்சமும் அறிந்திராத அந்தப் பெண் ஒரிய மொழியில் பேசியதைக் கேட்டபோது தான் பேய் இருக்கிறது என்ற நம்பிக்கை வந்தது. ஆனாலும பேய்களால் ஒருபோதும் தெய்வசக்தியை மேற்கொள்ள முடியாது என்பது என் முழு நம்பிக்கை. சொல்லப் போனால் எங்கள் படத்தின் கதையும் அது தான்.''

Leave a Reply