- செய்திகள்

ஆவணம் இல்லாத 20 ஆட்டோக்கள் பறிமுதல் வாகன தணிக்கை…

செங்கம், ஆக. 25-
விழுப்புரம் மண்டல போக்குவரத்து தனிபிரிவு அலுவலர் கவிதா தலைமையில் அதிகாரிகள் நேற்று  காலை 7 மணியளவில் போலீசார் உதவியுடன் செங்கம் நகரிலுள்ள புதிய மற்றும் பழைய பேருந்து நிலையம், பஜார் வீதி, மில்லட் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் தங்களின் ஆட்டோக்களின் ஆவணங்கள் காவல்நிலையத்தில் போக்குவரத்து அதிகாரியிடம் காண்பித்த பிறகு சரியாக இருந்தால் அவர்கள் ஆட்டோக்களை எடுத்துச் செல்லலாம் என போக்குவரத்து அதிகாரி கவிதா தெரிவித்தார்.
அதன்பேரில் ஆட்டோ ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்கள் செங்கம் காவல்நிலையம் சென்று ஆவணங்களை காண்பித்தனர். இவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது முறையான ஆவணம் இல்லாத 20-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
——-

Leave a Reply