- செய்திகள், விளையாட்டு

ஆல்-ரவுண்டர் ஷேன் வாட்சன் நம்பிக்கை 20 ஓவர் உலக கோப்பை அணிக்கு தேர்வு பெறுவேன்

சிட்னி, பிப்.17:-

அடுத்த மாதம் நடைபெற உள்ள 20 ஓவர் உலக கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவேன் என்று அந்த அணியின் ஆல்-ரவுண்டரான ஷேன் வாட்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதம் 8-ம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 3-ம் தேதி வரை இந்தியாவில் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது.

இந்த நிலையில் அந்தப் போட்டியில் பங்கேற்க உள்ள ஆஸ்திரேலிய அணி விரைவில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளது. இதற்கிடையே அந்த அணியில் தேர்வு பெறுவதற்கான முழு உடல் தகுதியை பெற்றுவிடுவேன் என்றும் வாட்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வாட்சன் தற்போது அடிவயிற்றில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார்.

காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணியில் ஆரான் பின்ஞ், ஜேம்ஸ் பால்க்னர், நாதன் கோல்டெர் ஆகியோருடன் வாட்சனும் இடம் பெறுவதற்கான வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர்.

இதனிடையே  ஆஸ்திரேலிய அணியின் கிரிக்கெட் வெப்சைட்டில் வாட்சன் தெரிவித்துள்ள கருத்து வெளியாகியுள்ளது. அதில், இன்னும் இரண்டு வாரங்களில் பேட்டிங், பந்து வீச்சு இரண்டுக்கும் முழுத் தகுதி பெற்றுவிடுவேன் என்ற நம்பிக்கை உள்ளதாக வாட்சன் தெரிவித்துள்ளார்.

தனக்கு ஏற்பட்டுள்ள காயம் ஒன்றும் பெரிதான அல்ல என்றும் இன்னும் போட்டி நடக்க 3 வாரங்கள் இருப்பதால் தன்னால் நிச்சயம் பூரண குணமடைந்து அணியில் சிறப்பாக விளையாட முடியும் என்று நம்பிக்கையுடன் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply