- செய்திகள், வணிகம்

ஆயிரம் ஏ.டி.எம். எந்திரங்களை நிறுவ இலக்கு

புதுடெல்லி, ஜன.18:-
இந்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் ஆயிரம் ஏ.டி.எம். எந்திரங்களை நிறுவவும், 25 ஆயிரம் தலைமை அஞ்சல் நிலையங்களில் கோர் பேங்கிங் சிஸ்டம் வசதியை ஏற்படுத்தவும் இந்திய அஞ்சல் துறை இலக்கு நிர்ணயித்துள்ளது.

இந்திய அஞ்சல் துறை இது குறித்து  கூறியிருப்பதாவது:-
நம் நாட்டில் மொத்தம் 1.55 லட்சம் அஞ்சல் நிலையங்கள் உள்ளன. இதில் 1.30 லட்சம் கிராமப்புறங்களில் உள்ளன. வாடிக்கையாளர்கள் சேவையை மேம்படுத்தும் நோக்கில் இந்திய அஞ்சல் துறை கோர் பேங்கிங் சிஸ்டம் வசதியை தனது அனைத்து கிளைகளிலும் ஏற்படுத்தி வருகிறது. இதன் மூலம் அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள்,  நாட்டின்  எந்த பகுதியிலும் கோர் பேங்கிங் சிஸ்டம் வசதி உள்ள அஞ்சல் நிலையங்களில் பணத்தை எடுக்கலாம்.  இதுவரை 12,441 அஞ்சல் நிலையங்களில் கோர் பேங்கிங் சிஸ்டம் (மைய வங்கி அமைப்பு) ஏற்படுத்தப்பட்டுள்ளது. 2016 மார்ச் மாதத்துக்குள் இதனை 25 ஆயிரமாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், இதே காலத்துக்குள் மொத்த ஏ.டி.எம். எந்திரங்களின் எண்ணிக்கையை ஆயிரமாக அதிகரிக்க உள்ளது. இதுவரை 300 ஏ.டி.எம். எந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளது.

பயோமெட்ரிக்

2017-ம் ஆண்டுக்குள் 1.30 லட்சம் அஞ்சல் நிலையங்களில் சூரிய சக்தி மூலம் மின்சாரம் வழங்கப்படும்.  கை விரல் ரேகை பதிவு செய்யும் பயோமெட்ரிக் கருவி பொருத்தப்படும். வரும் மார்ச் 31-ந் தேதிக்குள் ஊரகப்பகுதிகளில் அமைந்துள்ள 20 ஆயிரம் அஞ்சல் நிலையங்களுக்கு இந்த கருவி சப்ளை செய்யப்படும்.

இவ்வாறு அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply