- செய்திகள்

ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து வழிபாடு குமரகோட்டம் முருகன் கோவிலில்…

காஞ்சிபுரம், ஜூலை.29-
காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகையையொட்டி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து வந்து முருகப்பெருமானை தரிசித்தனர்.
ஆடிக்கிருத்திகை
ஆடிக்கிருத்திகையையொட்டி, பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோவிலில், முருகப்பெருமானுக்கு விசேஷ அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. அப்போது, அங்கு கூடியிருந்த பக்தர்கள் முருகா! முருகா! என்று பக்தி கரகோஷம் எழுப்பினர். பிறகு மலர் அலங்காரத்தில் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
பால்காவடி
ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்பக் காவடி எடுத்து 4 ராஜவீதிகளில் ஊர்வலமாக வந்து முருகப்பெருமானை வழிபட்டனர். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட அ.தி.மு.க. பிரதிநிதி ஆர்.வி.ரஞ்சித்குமார், பட்டு தொழிலதிபர் வி.கே.தாமோதரன், கவிஞர் கூரம் துரை உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.
இளையனார் வேலூர்
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி மா.வெள்ளைச்சாமி, மேலாளர் சீனிவாசன், மற்றும் கோவில் பணியாளர்கள், அர்ச்சகர்கள் செய்து இருந்தனர். இதேபோல் காஞ்சிபுரம் அருகே பிரசித்தி பெற்ற இளையனார் வேலூர் முருகன் கோவிலில், ஆடிக்கிருத்திகையையொட்டி பக்தர்கள் நீண்ட விரிசையில் நின்று முருகப் பெருமானை தரிசனம் செய்தனர்.

Leave a Reply