- செய்திகள், நாகபட்டினம், மாவட்டச்செய்திகள்

ஆமைக் குஞ்சுகள் கடலில் விடப்பட்டன கோடியக்கரையில் பொறித்த…

நாகப்பட்டினம், ஏப்.3-
நாகை மாவட்டம் கோடியக்கரையில் பொறித்த ஆலிவ்ரெட்லி ஆமைக் குஞ்சுகள் கடலில் விடப்பட்டன.
குஞ்சு பொறியப்பகம்
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை கடலோரப் பகுதியில் ஆமைக்குஞ்சு பொரிப்பகம் வனத் துறையால் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆண்டுதோறும் பல கடல்மைல் தூரம் கடந்து வந்து ஆலிவ் ரெட்லி ஆமைகள் கடற்கரையில் மண்ணைத்தோண்டி முட்டை இட்டுவிட்டு கடலுக்குள் சென்றுவிடும். பின்னர் கடலுக்குள் சென்று தனது நினைவலைகள் மூலம் கரையில் உள்ள முட்டைகளைப் பொறிக்கச் செய்யுமாம். அதுவரை அந்த முட்டைகளை வனத்துறையினர் பாதுகாத்து வருகின்றனர்.
காப்பாற்ற நடவடிக்கை
இந்த ஆண்டும் இந்தப் பகுதிக்கு வந்த ஆலிவ்ரெட்லி ஆமைகள் முட்டையிட்டுச் சென்றன. ஒவ்வொரு ஆமையின் முட்டைகளும் தனித்தனியாக வனத் துறையினரால்  பாதுகாக்கப்படுகிறது. 45 நாட்கள் முதல் 55 நாட்களுக்குள் முட்டையிலிருந்து  ஆலிவ் ரெட்லி குஞ்சுகள் வெளிவருகின்றன. கடந்த பிப்ரவரி மாதம் சேகரிக்கப்பட்ட  144 முட்டையிலிருந்து வெளிவந்த குஞ்சுகளை  வனத் துறை ஊழியர்கள் கடலில் விட்டனர்.
கடந்த ஆண்டுகளைவிட   இந்த ஆண்டு ஆலிவ் ரெட்லி ஆமைகளின் வரத்து குறைந்துள்ளது. அழிந்துவரும் ஆலிவ் ரெட்லி ஆமையினங்களை காப்பாற்ற வனத் துறையினர்  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இயற்கை ஆர்வலர்களின்  கோரிக்கையாக உள்ளது.

Leave a Reply