- செய்திகள், விளையாட்டு

ஆப்கானிஸ்தான் முன்னணி சுழற்பந்து வீச்சாளருக்கு கொரோனா ஆஸி. மருத்துவமனையில் அனுமதி

பிக் பாஷ் டி20 லீக்கில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ள முஜீப் உர் ஹர்மானுக்க கொரோனா உறுதி செய்யப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிக் பாஷ் லீக் டி20 கிரிக்கெட் ஆஸ்திரேலியாவில் வருகிற 10-ந்தேதி தொடங்குகிறது. இந்தத் தொடரில் விளையாடுவதற்காக ஆப்கானிஸ்தானின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் முஜீப் உர் ரஹ்மான் ஆஸ்திரேலியா சென்றுள்ளார்.

முஜீப் பிரிஸ்பேன் ஹீட் அணிக்காக விளையாட உள்ளார். ஆஸ்திரேலியா சென்றதும் ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டார். அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனால் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனாவில் இருந்து மீண்டு வந்தபின், ஒன்றிரண்டு போட்டிகளில் அவரால் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது

Leave a Reply