- உலகச்செய்திகள், செய்திகள்

ஆப்கானில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் அட்டூழியம் மனித வெடிகுண்டு தாக்குதலில் 13 பேர் உடல் சிதறி பலி

ஜலலாபாதா, ஜன.18:-

ஆப்கானிஸ்தானின் கிழக்குப்பகுதியில் உள்ள ஜலலாபாத் நகரில் ஐ.எஸ். தீவிரவாதி ஒருவன் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டனர். 14-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

கடந்த புதன்கிழமைக்குப்பின் ஜலலாபாத் நகரில் நடத்தப்பட்ட 2-வது தாக்குதலாகும்.

நாங்கர்கர் மாநிலத்தில் உள்ள ஜலலாபாத் நகரம். இங்கு உள்ளூர் அரசியல் தலைவரும், அப்பகுதியில் பிரபலமானவர் உபயத்துல்லா ஷின்வாரி. இவரின் வீட்டில் நேற்று மதரீதியான கூட்டம் நடந்தது. இதில் கலந்துகொள்ள ஏராளமான பழங்குடியின தலைவர்கள் வந்து இருந்தனர். அவர்கள் ஷின்வாரியின் வீட்டின் முன் கூடி இருந்தனர்.

அப்போது, உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு கூட்டத்துக்குள் புகுந்த ஐ.எஸ். தீவிரவாதி ஒருவன், அந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தான். இதில் 13- பேர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதல் குறித்து நாங்கர்கர் மாநில கவர்னர் வெளியிட்ட அறிவிப்பில், உள்ளூர் அரசியல் தலைவர் உபயத்துல்லா ஷின்வாரி வீட்டை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய இந்த மனித வெடி குண்டு தாக்குதலில் 13 பேர் உடல்சிதறி கொல்லப்பட்டனர். 14-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் அரசுக்கும், தலிபான் தீவிரவாதிகளுக்கும் இடையை முடிங்கிக்கிடக்கும் அமைதிப்பேச்சை மீண்டும் தொடங்குவதற்கு சர்வதேச அமைப்புகள் நடவடிக்கை எடுத்துவருகின்றன. அதற்கு இடையூறு செய்யும் விதமான ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

கடந்த வாரம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான்,அமெரிக்கா, மற்றும் சீன நாடுகளின் பிரதிநிதிகள் தலிபானுடனான அமைதிப்பேச்சை மீண்டும் தொடங்குவதற்கான செல்திட்டம் குறித்து கூடி ஆலோசனை நடத்தினர். அதைத்தொடர்ந்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Leave a Reply