- செய்திகள், தேசியச்செய்திகள்

ஆப்கனில் அரசுப் பேருந்து மீது வெடிகுண்டு தாக்குதல்

 

காபூல், ஏப். 12:- ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அரசுப் பேருந்து ஒன்று, அந்நாட்டு கல்வித்துறை ஊழியர்களை ஏற்றிக் கொண்டு, சென்று கொண்டிருந்தது. அதில், தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை பொருத்தி உள்ளனர். காந்தத்தின் உதவியால், அந்த வெடிகுண்டு, பேருந்துடன் பொருத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில், பேருந்து சென்று கொண்டிருந்தபோது, வெடிகுண்டு வெடித்து பேருந்து சின்னாபின்னமானது. இதில் ஒருவர் உயிரிழந்தார். 5 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு எந்தவொரு தீவிரவாத இயக்கமும் பொறுப்பு ஏற்கவில்லை. இதுபோன்ற வெடிகுண்டு தாக்குதல் சம்பவங்கள், தலைநகர் காபூலிலும் சர்வ சாதாரணமாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply