- உலகச்செய்திகள், செய்திகள், விளையாட்டு

ஆன்ட்ரே பிளச்சருக்குப் பதில் சிம்மோன்ஸ் மேற்கிந்தியத் தீவுகள் அணியில்

மும்பை, மார்ச் 30:-

மேற்கிந்தியத் தீவுகள் அணியில் ஆன்ட்ரே பிளச்சருக்குப் பதில் லென்டில் சிம்மோன்ஸ் களம் இறங்க உள்ளார்.
இந்தியாவில் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்தப் போட்டியின் இரண்டாவது அரை இறுதி ஆட்டம் மும்பையில் நாளை நடக்கிறது. இந்தப் போட்டியில் இந்தியாவும் மேற்கிந்தியத் தீவுகள் அணியும் மோதுகின்றன.
இந்தப் போட்டியில் பங்கேற்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணியில் ஆன்ட்ரே பிளச்சர் காயம் காரணமாக இடம் பெறமாட்டார் என்றும் அணியின் மேலாளர் தெரிவித்துள்ளார். அவருக்கு பதிலாக வலது கை ஆட்டக்காரரும் மித வேகப் பந்து வீச்சாளருமான சிம்மோன்ஸ் விளையாடுவார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சிம்மோன்ஸ் ஐபிஎல் போட்டியில் மும்பை அணியில் பங்கேற்று விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிளச்சர் இந்தப் போட்டியில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் ஆட்டமிழக்காமல் 84 ரன்கள் எடுத்தார். ஆயினும் கடைசியாக நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அவருக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்து.

Leave a Reply