- செய்திகள், விளையாட்டு

ஆசிய உள்ளரங்க தடகளப் போட்டி

தோஹா, பிப்.22:-
ஆசிய உள்ளரங்க தடகளப் போட்டியில் இந்திய வீராங்கனை மகேஸ்வரி மும்முறை தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

கத்தார் தலைநகர் தோஹாவில் ஆசிய உள்ளரங்க தடகளப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற மும்முறை தாண்டுதல் போட்டியில் மகேஸ்வரி வெள்ளிப் பதக்கம் வென்றார். இவர் 16.16 மீட்டர் தூரம் தாண்டி இரண்டாம் இடம் பிடித்தார். முன்னதாக கஜகஸ்தானின் ரோமன் வலியேவ் முதல் இடம் பிடித்தார். இவர் 16.69 மீட்டர் தூரம் தாண்டினார்.

கத்தாரைச் சேர்ந்த ரஷித் அகமது  வெண்கலம் வென்றார். இவர் இந்த தூரத்தை 15.97 மீட்டர் தூரம் தாண்டினார்.

இதனிடையே 60 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் இந்தியாவின் காயத்திரி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். இவர் 8.38 விநாடிகளில் இந்த தூரத்தை கடந்தார். இறுதிப் போட்டி இன்று நடைபெறுகிறது.

முன்னதாக இந்திய வீராங்கனை மயூகா ஜானி மும்முறைத் தாண்டுதலில் வெள்ளியும் நீளம் தாண்டுதலில் தங்கமும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply