- சினிமா, செய்திகள்

ஆக்&ஷன் அமீர்

 

டைரக்டர் அமீர் மவுனம் பேசியதே, ராம், பருத்திவீரன் என அடுத்தடுத்த வெற்றிகளில் உச்சம் போனார். ஆனால் அடுத்து ஜெயம்ரவியை இயக்கிய `ஆதிபகவன்' படம் சுருண்டு கொள்ள, அடுத்து புதிய படம் எதுவும் இயக்கவில்லை. இதற்கிடையே `யோகி' படத்தில் நாயகனாக நடித்தார். மேற்கொண்டு நடிகராகவும் அவரை பார்க்கலாம் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நேரத்தில் நடிக்கவும் இல்லை. படம் இயக்கவும் இல்லை.
இப்போது இந்த நீண்ட மவுனத்துக்கு விடை கிடைத்திருக்கிறது. `தொட்டிஜெயா' வெற்றிப் படத்தை இயக்கிய வி.இசட்.துரை இயக்கும் புதிய படத்தில் ஆர்யாவுடன் இன்னொரு நாயகனாக நடிக்கிறார் அமீர். இந்தப் படம் ஆக்‌ஷன் கதைக்களம் என்பதால் அமீரை இனி ஆக்‌ஷன்அமீராகவும் ரசிகர்கள் பார்க்கலாம்.

Leave a Reply