- சென்னை, செய்திகள், மாவட்டச்செய்திகள்

அ.தி.மு.க. வேட்பாளர் நேர்காணல் 10-வது நாளாக

சென்னை, மார்ச் 31-
அ.தி.மு.வி.ல் 10-வது நாளாக வேட்பாளர் நேர்காணல் நடைபெற்றது.
அ.தி.மு.க.

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அ.தி.மு.க.வில் விருப்ப மனுத்தாக்கல்  செய்தவர்களிடம் முதல்கட்ட நேர்காணல் கடந்த 6-ந் தேதி தொடங்கியது.  இதைத்தொடர்ந்து, இரண்டாம் கட்ட நேர்காணல் கடந்த 21-ந்தேதி தேதி தொடங்கியது.
10-வது நாளாக
சென்னை போயஸ் கார்டனில் உள்ள அ.தி.மு.க.பொதுச்செயலாளர் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வீட்டில் நேர்காணல் தொடர்ந்து நடந்து வருகிறது. விருப்பமனு அளித்தவர்களிடம், அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதல்-அமைச்சருமான ஜெயலலிதா நேர்காணல் நடத்தி வருகிறார்.  இந்த வரிசையில் 10-வது நாளாக நேற்று  காலை கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு  நேர்காணல் நடைபெற்றது.
திருவண்ணாமலை
பிற்பகல் 3 மணிக்கு மேல் திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கடலூர்,  விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் நேர்காணல் நடைபெற்றது.  இதுதவிர, புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்காக விருப்பமனு அளித்தவர்களிடமும் நேர்காணல்  நடத்தப்பட்டது. நேற்று நடந்த நேர்காணலின்போது, விடுபட்ட தொகுதி களுக்கு இன்று (வியாழக்கிழமை) காலை நேர்காணல் நடத்தப்படும் என அ.தி.மு.க. வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.
நேர்காணல் இறுதி கட்டத்தை எட்டியிருப்பதால், வரும் ஏப்ரல் 11-ந்தேதி அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என  தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply