- அரசியல் செய்திகள், செய்திகள், மாவட்டச்செய்திகள்

அ.தி.மு.க. வரலாறு காணாத வெற்றி பெற பணியாற்றுவோம் சிறுபான்மை நலப்பிரிவினர் கூட்டத்தில் தீர்மானம்…

சென்னை, பிப். 2-
சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வரலாறு காணாத வெற்றி பெற களப்பணியாற்றுவோம் என்று அ.தி.மு.க.சிறுபான்மை நலப்பிரிவினர் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆலோசனை

அ.தி.மு.க சிறுபான்மை நலப்பிரிவு நிர்வாகிகள் மற்றும் ஆலோசனைக் கூட்டம், அதன் தலைவர் ஏ.ஜஸ்டின் செல்வராஜ் தலைமையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினரும், சிறுபான்மை நலப்பிரிவு செயலாளருமான அ.அன்வர்ராஜா முன்னிலை வகித்தார். அ.தி.முக சட்டமன்ற உறுப்பினரும், சிறுபான்மை நலப்பிரிவு துணை செயலாளருமான பிரபாகர் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில், அமைச்சர்கள் ப.மோகன், உதயகுமார், எஸ். அப்துல் ரஹீம், அமைப்பு செயலாளர்கள் சி.பொன்னையன், செ.செம்மலை, ஏ,கே. செல்வராஜ், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் அ. தமிழ்மகன் உசேன், மாணவரணி செயலாளர்  விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். அ.தி.மு.க தென் சென்னை வடக்கு மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு செயலாளர்  முகம்மது அலி ஜின்னா நன்றி கூறினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:-
234 தொகுதிகளிலும்…
* முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை சிறுபான்மையினர் நலப்பிரிவின் சார்பாக சீரோடும், சிறப்போடும் கொண்டாடுவது.
* சட்டசபை தேர்தலில், வரலாறு கண்டிராத மாபெரும் வெற்றியை, அ.தி.மு.க 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கு சிறுபான்மை நலப்பிரிவு களப்பணியாற்றுவது.

* மழை வெள்ளத்தின் போது நிவாரண பணிகளை சிறப்பாக செய்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை பாராட்டு தெரிவித்து.

* தமிழகத்தில் சிறுபான்மை சமுதாய மக்களின் கேடயமாக, பாதுகாப்பு அரணாக, விளங்கி வரும் முதல்-அமைச்சருக்கு, அனைத்து சிறுபான்மை மக்களின் சார்பாக நன்றி தெரிவித்தல்.
மேற்கண்டவை உள்பட 5 தீர்மானங்கள் அ.தி.மு.க சிறுபான்மை நலப்பிரிவு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

Leave a Reply