- செய்திகள், விளையாட்டு

அஸ்லான்ஷா கோப்பை ஆக்கி போட்டி பைனலுக்கு தகுதிபெறுமா இந்திய அணி?

இபோ, ஏப். 15:-

மலேசியாவில் நடந்துவரும் 25-வது அஸ்லான்ஷா கோப்பை ஆக்கிப் போட்டியில் பைனலுக்கு தகுதிபெறும் வாழ்வா-சாவா ஆட்டத்தில் மலேசிய அணியை இன்று இந்திய அணி எதிர்கொள்கிறது.

இந்திய அணி இதுவரை நடந்த 5 ஆட்டங்களில் 3-ல் வெற்றியும், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளிடம் தோல்வி அடைந்துள்ளது. குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 5-1 என்ற கோல் கணக்கில் வென்று அசத்தியது.

உலகசாம்பியன் ஆஸ்திரேலிய அணி 15 புள்ளிகளுடன் முதலிடத்தில் ஏற்கெனவே பைனலுக்கு தகுதிபெற்றுள்ளது. நடப்பு சாம்பியன் நியூசிலாந்து அணி 11 புள்ளிகளுடன் 2-ம் இடத்தில் உள்ளது. இந்திய அணி 9 புள்ளிகளுடன் இருப்பதால், இன்றைய போட்டியில் வெற்றி பெற்று, கோல் கணக்கை முந்தினாலே பைனலுக்கு சென்றுவிடும்.

நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் கடுமையான வெயிலில் இந்திய வீரர்கள் ஆடியதால் 1-2 என்று இந்திய அணி தோல்வி அடைந்தது. ஒருவேளை வெற்றி பெற்று இருந்தால், இந்திய அணி பைனலுக்கு முன்னேறி இருந்திருக்கும்.

கடந்த ஆஸ்லான் ஷா கோப்பைப் போட்டியில், இந்தியாவை 2-3 என்ற கோல்கணக்கில் மலேசியா தோற்கடித்தது. அதற்கு பதிலடியாக, வோர்ல்ட் லீக் அரையிறுதியில் மலேசியாவை 2-3 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வீழ்த்தி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதியானது.

ஆதலால், இந்தியாவிடம் அடைந்த கடந்த தோல்விக்கு மலேசிய அணி இன்று பழிதீர்க்க முயலும். அதுமட்டும் அல்லாமல், இறுதிச்சுற்றுக்கு மலேசிய அணி தகுதிபெற வேண்டுமானால், இன்றைய ஆட்டத்தில் மலேசிய அணி 7 கோல்கள் அடிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply