- செய்திகள்

அவதூறு வழக்கு தள்ளிவைப்பு மு.க.ஸ்டாலின் மீதான…

மதுரை ஆக. 25-
அவதூறு வழக்கை ரத்து செய்யக்கேட்டு மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு 30-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

அவதூறு

திண்டுக்கல்லில் கடந்த 2013-ம் ஆண்டு தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின், முதல்- அமைச்சர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக புகார் கூறப்பட்டது.
இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் மீது திண்டுக்கல் மாவட்ட அரசு வக்கீல் அங்குள்ள நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

ஆஜர்
இதனை ரத்து செய்யக் கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் மு.க.ஸ்டாலின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீதான விசாரணை நீதிபதி விமலா முன்னிலையில் நேற்று நடைபெற்றது. மு.க.ஸ்டாலின் தரப்பில் வக்கீல்கள் ரவி, மாணிக்கம் ஆகியோர் ஆஜரானார்கள்.

தள்ளிவைப்பு

அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் பாலசுப்பிரமணியன், இந்த வழக்கில் தலைமை குற்றவியல் அரசு வக்கீல் ஆஜராகி வாதாட இருப்பதால் விசாரணையை தள்ளிவைக்குமாறு கேட்டுக் கொண்டார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி விமலா, வருகிற 30-ந்தேதிக்கு வழக்கு விசாரணையை தள்ளிவைத்தார்.

Leave a Reply