- செய்திகள்

அழுகிய நிலையில் வாலிபர் மர்ம சாவு செங்குன்றம் அருகே…

செங்குன்றம், ஆக. 19-
செங்குன்றம் அருகே வீட்டுக்குள் அழுகிய நிலையில் மர்மமான முறையில் ஆண் பிணம் இருந்தது.
வாலிபர்
சென்னை வியாசார்பாடி எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையைச் சேர்ந்த தேவராஜ் மகன் சங்கர் (வயது 36). இவருடைய தங்கை அமுதா என்பவர் செங்குன்றத்தை அடுத்த எடப்பாளையம் ஸ்ரீராம் நகரில் வீடுகட்டி வருகிறார். கடந்த ஒரு மாதமாக வீடு கட்டுமான பணி நிறுத்தப்பட்டது.
அழுகிய நிலையில்
இந்தக்கட்டுமான பணியை கவனித்து வந்த சங்கர் அடிக்கடி இங்கு வந்து செல்வது வழக்கம். அதேப்போல் கடந்த 3 தினங்களுக்கு முன்பு கட்டுமானம் நடந்த வீட்டில் படுத்து தூங்கி உள்ளார். இந்நிலையில் நேற்று காலை அவரது தங்கை வந்து பார்த்த போது அழுகிய நிலையில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
விசாரணை
இது குறித்து சோழவரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்ட்டது. இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் பிணத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். சங்கரை யாரேனும் கொலை செய்தார்களா அல்லது தானாகவே அவர் இறந்தாரா என்பது குறித்து சோழவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply