- செய்திகள், வணிகம்

அலுவலக இடங்களுக்கான தேவை 26 சதவீதம் குறைந்தது

கடந்த ஜனவரி-மார்ச் காலாண்டில்
சொத்து ஆலோசனை நிறுவனமான சி.பி.ஆர்.இ. தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
டெல்லி என்.சி.ஆர்., மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஐதராபாத், பூனா ஆகிய நாட்டின் முக்கியமான 7 நகரங்களில் அலுவலக இடங்களுக்கான தேவை கடந்த காலாண்டில் (ஜனவரி-மார்ச்) 26 சதவீதம் குறைந்து 50 லட்சம் சதுர அடியாக சரிவடைந்துள்ளது. நிறுவனங்கள் இன்னும் இந்த ஆண்டுக்கான ரியல் எஸ்டேட் திட்டங்களை இறுதி செய்யாததே இதற்கு காரணம். கடந்த மார்ச் காலாண்டில் மொத்த அலுவலக இடத் தேவையில் டெல்லி என்.சி.ஆர். அதிக அளவாக 31 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது. அடுத்து, மும்பை (23 சதவீதம்), பெங்களூரு (17 சதவீதம்) ஆகிய நகரங்கள் உள்ளன.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply