- செய்திகள்

அறிக்கை (ஜி.கே.வாசன் ஆடு)

 

இது தொடர்பாக, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சேலம் உருக்கலையை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியில் மத்திய அரசு தற்போது ஈடுபட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தின் அடையாளமாகவும், சுமார் 2 ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரமாகவும், தென்னிந்தியாவின் சிறப்பான நிறுவனமாகவும் விளங்கும் சேலம் உருக்காலையை மத்திய அரசு தனியாருக்கு தாரை வார்ப்பதை தடுக்கும் முயற்சியில் தமிழக அரசு முனைப்புடன் செயல்பட வேண்டும்.
வேண்டுகோள்
எனவே சேலம் உருக்காலையை தொடர்ந்து அரசு பொதுத்துறை நிறுவனமாக இயக்கிடவும், உருக்காலைக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு வேலை வாய்ப்பு அளித்திடவும், இரும்பாலையை சுற்றியுள்ள கிராம மக்களுக்கு சுகாதார வசதிகளை ஏற்படுத்தி தரவும், உருக்காலையினால் சுற்றுப்புறச் சூழல் மாசுபடாமல் தடுத்திடவும் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு ஜி.கே.வாசன் கூறி உள்ளார்.

Leave a Reply