- செய்திகள், விளையாட்டு

அரையிறுதியில் குட்நெட்சோவா மியாமி ஓபன் டென்னிஸ்

மியாமி, மார்ச் 31:-

அமெரிக்காவின் மியாமி நகரில் நடந்து வரும் மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிச் சுற்றுக்கு ரஷிய வீராங்கனை வெட்லானா குட்நெட்சோவா தகுதி பெற்றார்.

அதேபோல ஆடவர் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு நம்பர் ஒன் வீரரும், செர்பியாவின் நோவாக் ஜோக்கோவிக், பிரான்ஸ் வீரர் மோன்பில்ஸ் ஆகியோர் முன்னேறியுள்ளனர்.

மியாமி நகரில் நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் ரஷிய வீராங்கனை வெட்லானா குட்நெட்சோவாவை  எதிர்த்து மோதினார் சகநாட்டு வீராங்கனை எலீனா மகரோவா. பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் மகரோவாவை 7-6, 6-4, 6-3 என்ற செட்களில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் குட்நெட்சோவா.

மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் ரோமானிய வீராங்கனை சிமோனா ஹாலப்பை 6-4, 3-6, 2-6 என்ற செட்களில் தோற்கடித்தார் சுவிட்சர்லாந்து வீராங்கனை பேக்சின்ஸ்கி.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடந்த 4-வது சுற்று ஸ்திரிய வீரர் டி தீமை 3-6, 4-6 என்ற செட்களில் தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார் செர்பிய வீரர் நோவாக் ஜோக்கோவிக். மற்றொரு ஆட்டத்தில், பல்கேரிய வீரர் டிமிட்ரோவ்வை 6-7, 6-3, 6-3 என்ற செட்களில் போராடி சாய்த்தார் பிரான்ஸ் வீரர் மோன்பில்ஸ்.

Leave a Reply