- செய்திகள், விளையாட்டு

அரையிறுதிக்கு தகுதியாவதே இலக்கு இந்திய கேப்டன் மிதாலி ராஜ் பேட்டி

பெங்களூரு, மார்ச் 10:-

டி20 மகளிர் உலகக்கோப்பைப் போட்டியின் அரையிறுதிக்கு தகுதி பெறுவதே எங்களின் முதல் இலக்கு என்று இந்திய மகளிர் அணியின் கேப்டன் மிதாலி ராஜ்  பெங்களூருவில் நேற்று தெரிவித்தார்.

மகளிர் டி20 உலகக்கோப்பை அறிமுக  நிகழ்ச்சி பெங்களூருவில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்டபின், நிருபர்களுக்கு இந்திய அணியின் கேப்டன் மிதாலிராஜ் கூறியதாவது: டி20 உலகக்கோப்பைப் போட்டியின் அரையிறுதிக்கு தகுதிபெறுவதே எங்களின் முதல் இலக்கு. ஆதலால், ஒவ்வொரு லீக் போட்டியையும், நாக்-அவுட் போட்டிபோல கருதியே விளையாடுவோம்.

சமீபத்தில் முடிந்த, இலங்கை, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டி20 தொடரை வெற்றிகரமாக முடித்துள்ளதால், உலகக்கோப்பைப் போட்டியிலும் சிறப்பாகச் செயல்படுவோம் என்று நம்புகிறோம். ஆதலால், நாங்கள் ஏன் அரையிறுதிக்கு தகுதிபெறமாட்டோம் என்று நினைக்கவில்லை. எங்களுக்கு ஆஸ்திரேலிய அணிதான் சவலான அணியாக இருப்பார்கள் என்று நினைக்கிறோம். இருந்தபோதிலும் சமீபத்தில் அந்த அணியையும் வீழ்த்தியிருக்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் இலங்கை அணியின் கேப்டன் சசிகலா ஸ்ரீவர்தனா, அயர்லாந்து கேப்டன் இசபெல் ஜாய்ஸ், வங்காளதேச அணியின் கேப்டன் ஜகன்னாரா ஆலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தியா மகளிர் அணி வரும் 15-ந்தேதி தேதி தொடங்கும் முதல் போட்டியில் வங்காளதேச அணியை எதிர்கொள்கிறது.

Leave a Reply