- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள்

அருப்புக்கோட்டை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மாற்றம்

சென்னை, ஏப்.6-
அருப்புக்கோட்டை தொகுதிக்கு அறிவிக்கப்பட்டு இருந்த முத்துராஜா என்ற வேட்பாளர் மாற்றப்பட்டு, முன்னாள் அமைச்சர் வைகை செல்வத்தை வேட்பாளராக ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
வேட்பாளர் மாற்றம்
தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. 227 தொகுதிகளில் போட்டியிடும் என்றும் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா நேற்று முன் தினம் அறிவித்தார். வேட்பாளர்கள் பட்டியலையும் அவர் வெளியிட்டார். அந்த பட்டியலில் அருப்புக்கோட்டை தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்த முத்துராஜா மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டார்.

தனது கட்சிவேட்பாளர்கள் மற்றும் தோழமை கட்சிகளின் வேட்பாளர்களையும் ஆதரித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா வரும் 9-ந் தேதி தனது பிரசாரத்தை தொடங்குகிறார். தான் போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதியில் அவர் முதலில் பிரசாரத்தை தொடங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply