- செய்திகள்

அமைச்சர்கள் குறிக்கீட்டை தடுக்க முடியாது தி.மு.க.வுக்கு சபாநாயகர் பதில்…

சென்னை, ஜூலை. 28-
அமைச்சர்கள் குறிக்கீட்டை தடுக்க முடியாது என்று தி.மு.க.வுக்கு சபாநாயகர் ப.தனபால் பதில் அளித்தார்.
அமைச்சர்கள் குறிக்கீடு
சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் நேற்று தி.மு.க. கொறடா சக்கரபாணி பங்கேற்று பேசினார். அப்போது தனது தொகுதியில் உள்ள குடிநீர் பிரச்சினை, சாலை வசதி, குளம்-அணை தூர்வாருவது, முதியோர் உதவித் தொகை உள்பட பல்வேறு பிரச்சினைகளை பேசினார்.
இதற்கு அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஆர்.பி.உதயகுமார், கே.பி.அன்பழகன் ஆகியோர் குறுக்கிட்டு அவர்களது துறைகள் சார்பில் விளக்கமாக பதில் அளித்தனர்.
தி.மு.க. எதிர்ப்பு
அப்போது குறிக்கிட்டு பேசிய துரைமுருகன் (தி.மு.க.), ‘இதற்கு நிதித்துறை அமைச்சர்தான் பதில் கூற வேண்டும். இப்படி மற்ற அமைச்சர்கள் விரிவாக பதில் கூறினால் நாங்கள் எப்படி பேசுவது’ என்றார்.
அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி:- எந்த துறையைப்பற்றி பேசுகிறீர்களோ அந்த துறை அமைச்சர்தான் பதில் தருகிறார்கள். உங்கள் ஆட்சியில் எப்படி பதில் கூறினீர்களோ அதே போல்தான் நாங்கள் இப்போது பதில் அளிக்கிறோம்.
துரைமுருகன்:- உறுப்பினர்கள் பேசுவதை குறித்து வைத்துக்கொண்டு கடைசியில் பதில் சொல்லுங்கள் அதுதான் முறை.
சபாநாயகர் பதில்
சபாநாயகர்:-அமைச்சர்கள் பதில் சொல்வதை தவிர்க்க முடியாது. அவர்கள் உரிய பதிலை சொல்லத்தான் செய்வார்கள்.
மு.க.ஸ்டாலின்:-குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல அமைச்சர்களுக்கு உரிமை உள்ளது. ஆனால் கோரிக்கை வைத்து பேசும்போது அதற்கு கடைசியில் தான் பதில் கூறுவது முறையாகும்.
சபாநாயகர்:-அமைச்சர்கள் விளக்கம் சொல்வதை தவறு என கூற முடியாது.
இவ்வாறு விவதம் நடந்தது.

Leave a Reply