- உலகச்செய்திகள், செய்திகள்

அமெரிக்க விசா கட்டண உயர்வால் இந்திய சாப்ட்வேர் என்ஜினீயர்களுக்கு பாதிப்பு

வாஷிங்டன், ஏப்.15-
அமெரிக்க விசா கட்டண உயர்வு, இந்திய தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.) நிறுவனங்களுக்கும் சாப்ட்வேர் என்ஜினீயர்களுக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது என்றும் இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வுகாண வேண்டும் என்றும் அருண் ஜெட்லி வலியுறுத்தினார்.
நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்று உள்ளார். அவர் நேற்று அமெரிக்க வர்த்தக பிரதிநிதி  மைக்கேல் பிரோமேனை சந்தித்து ேபசினார். அப்போது கூறியதாவது:-
பாகுபாடு
எச்1-பி மற்றும் எல்-1 விசாக்களுக்கான கட்டண உயர்வு பாகுபாடானது. இதனால் இந்திய  தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும், இந்திய சாப்ட்வேர் என்ஜினீயர்களுக்கும்  கடும் பாதிப்்பு ஏற்பட்டுள்ளது  இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளும் விரைவில் ஒப்பந்தம் மூலமாக தீர்வு காண வேண்டும்.
இந்திய தொழிலாளர்கள் கடந்த 10 ஆண்டுகளில் அமெரிக்காவின் சமூக பாதுகாப்பிற்கு 25 பில்லியன் அமெரிக்க டாலர் (166 கோடியே 46 லட்சத்து 25 ஆயிரம்) வழங்கியுள்ளனர் என்று நிறுவனங்கள் மதிப்பீட்டு உள்ளன.
வலியுறுத்தல்

வருமானத்தில் இரட்டை வரிவிதிப்பை தவிர்க்க அமெரிக்கா பல நாடுகளுடன் ஒப்பந்தம் செய்து உள்ளது. அதன்படி குறுகிய காலம் வேலைக்காக வரும் தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு வரி விதிப்பு கிடையாது. இருநாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் இந்தப் பிரச்சினையையும் தீர்க்க வேண்டும்.
இவ்வாறு அருண் ஜெட்லி கூறினார்.

இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், பொருளாதாரத்துறை விவகாரங்கள் செயலாளர் சக்திகந்த தாஸ் மற்றும் தலைமை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியம் ஆகியோரும் அருண் ெஜட்லியுடன் அமெரிக்கா சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
——————

Leave a Reply