- செய்திகள்

‘அப்பா’வானார் ஹர்பஜன்…

 

லண்டன், ஜூலை 29:-

இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங், கீதா பஸ்ரா தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

ஹர்பஜன், கீதா பஸ்ரா ஜோடிக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 29-ந்தேதி ஜலந்தரில் திருமணம் நடந்தது.  ஹர்பஜனின் மனைவி பஸ்ரா மகப்பேறுக்காக லண்டனில் பெற்றோருடன் கடந்த சில மாதங்களாக வசித்து வந்தார். இந்நிலையில், சமீபத்தில், கர்ப்பமாக இருக்கும் தனது மனையின் புகைப்படத்தை டுவிட்டரில் ஹர்பஜன் வெளியிட்டிருந்தார். இந்நிலையில், பஸ்ராவுக்கு லண்டனில் உள்ள மருத்துவமனையில் அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளதாக ஹர்பஜன் டுவிட் செய்துள்ளார்.

இந்த தகவலை ஹர்பஜனின் தாய்,அவதார் கவுரும் உறுதி செய்தார். தொலைபேசி மூலம், ஹர்பஜனையும், அவரின் மனைவி பஸ்ராவையும் தொடர்பு கொண்டு அவதார் கவுர், வாழ்த்துத் தெரிவித்தார்.

Leave a Reply