- செய்திகள்

அப்துல்கலாம் நினைவு நாள் ஒவ்வொரு மாணவரும் நினைவு கூறவேண்டிய பொன்னாள்' விஜயகாந்த் அறிக்கை…

சென்னை, ஜூலை. 28-
தே.மு.தி.க.தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மறைந்த முன்னாள் ஜனாதிபதியும், தமிழக மக்களால் மரியாதைக்குரியவராக போற்றப்படும் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் முதலாம் ஆண்டு நினைவு நாள் தே.மு.தி.க.சார்பில் மாணவர்கள் தினமாக அறிவிக்கபட்ட நாள். நம் நாட்டின் எதிர்காலம் மாணவர்கள் முன்னேற்றத்தில் தான் உள்ளது என்பதை அனைவருக்கும் உணர்த்தியவர். தனது வாழ்க்கையை ஆசிரியராக தொடங்கி, பின் விஞ்ஞானியாக இருந்து நம் நாடு போற்றும் ஜனாதிபதியாக வாழ்ந்தவர்.
ஒரு மனிதர் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு உதாரணமாக எளிமை, நேர்மை, கடின உழைப்பு ஆகியவற்றை பின்பற்றி மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர். தன் சீரிய சிந்தனையோடு அவர் எழுதிய பல புத்தகங்கள் நம் நாட்டிற்கு கிடைத்த பொக்கிஷங்கள். உலக அரங்கில் நம் இந்திய நாடு வல்லரசாக வரவேண்டும் என்பதற்காக அவர் கண்ட கனவு, ஆற்றிய உரைகள், பணிகள் அனைவர் மனதிலும் நீங்கா இடம் பெற்றிருக்கிறது. அம் மா மனிதர் நினைவு நாள், ஒவ்வொரு மாணவரும் நினைவு கூறவேண்டிய பொன்னாள்.
இவ்வாறு, தே.மு.தி.க.தலைவர் விஜயகாந்த் கூறி உள்ளார்.

Leave a Reply