- விளையாட்டு

அன்றே எச்சரித்தேன், நினைவு உள்ளதா ? இந்திய அணியின் தோல்வி குறித்து பீட்டர்சன் டுவிட்

ஆஸ்திரேலியாவை அந்த நாட்டில் தோற்கடித்தபோது நிறைய கொண்டாட வேண்டாம் என நான் எச்சரிக்கை விடுத்தது நினைவில் இருக்கிறதா ,இந்தியா ?என பீட்டர்சன் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 227- ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில், இந்திய அணியின் தோல்வியை கேலி செய்யும் வகையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பீட்டர்சன் டுவிட்டரில் பதிவை வெளியிட்டுள்ளார்.

பீட்டர்சன் வெளியிட்ட டுவிட் பதிவில், “ஆஸ்திரேலியாவை அந்த நாட்டில் தோற்கடித்தபோது நிறைய கொண்டாட வேண்டாம் என நான் எச்சரிக்கை விடுத்தது நினைவில் இருக்கிறதா இந்தியா” என்று பதிவிட்டுள்ளார். இந்தியில் இந்த டுவிட்டை பீட்டர்சன் பதிவிட்டு இந்திய ரசிகர்களை சீண்டியுள்ளார்.

Leave a Reply