- செய்திகள், வணிகம்

அன்னிய நேரடி முதலீடு

 

மத்திய தொழில், வர்த்தக துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்ற மாநிலங்களவையில் அன்னிய நேரடி முதலீடு குறித்த கேள்வி ஒன்றுக்கு எழுத்து பூர்வமான பதிலில் கூறியிருப்பதாவது:-
இந்த நிதி ஆண்டின் முதல் 9 மாதங்களில் (ஏப்ரல்-டிசம்பர்) நம் நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்த அன்னிய நேரடி முதலீட்டில் 90 சதவீதத்துக்கு மேல் அங்கீகரிக்கப்பட்ட வழிமுறையில் (ரிசர்வ் வங்கி, மத்திய அரசு அனுமதி தேவை இல்லை) பெறப்பட்டுள்ளது. 9.76 சதவீத அன்னிய நேரடி முதலீடு மட்டும் அரசின் அனுமதி பெற்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொழில் கொள்கை, மேம்பாட்டு வாரியத்தின் அறிக்கையின்படி நம் நாடு 2,944 கோடி டாலர் அன்னிய நேரடி முதலீட்டை ஈர்த்துள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply