- செய்திகள், விளையாட்டு

அனுபமும் திறமையும் நிறைந்தவர்களை கொண்டது -கேசவ் பன்சால் குஜராத் லயன்ஸ் அணி

ராஜ்கோட், ஏப்.5:-
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க உள்ள குஜராத் லயன்ஸ் அணியில் அனுபவமும் திறமையும் நிறைந்த வீரர்கள் இடம் பெற்றுள்ளது தனக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது என்று அந்த அணியின் உரிமையாளர் கேசவ் பன்சால் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வரும் 9-ம் தேதி தொடங்கிறது. இந்தப் போட்டியில் ஏற்கெனவே இடம் பெற்றிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான போட்டியில் குஜராத் லயன்ஸ், புனே சூப்பர் ஜெயின்ட்ஸ் என்ற இரண்டு அணிகள் பங்கேற்கின்றன.

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய பன்சால், தங்களது அணி மிகவும் வலுவான அணி என்று குறிப்பிட்டார். யார், யார் தனது அணியில் இடம் பெற வேண்டும் என்று கருதினேனோ அவர்கள் அனைவரும் இடம் பெற்றுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.

அனுபவமும் திறமையும் நிறைந்த வீரர்கள் தங்கள் அணியில் இருக்க வேண்டும் என்று கருதியதாகவும் அதன்படியே நடந்துள்ளது என்றும் அவர் திருப்தி தெரிவித்தார்.

சுரேஷ் ரெய்னா, ரவிந்திர ஜடேஜா, பிரென்டன் மெக்குல்லம், ஜேம்ஸ் பால்க்னர், டி பிரவோ ஆகிய சிறப்பான வீரர்கள் தங்கள் அணியில் இடம் பெற்றுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

குஜராத் அணி தனது முதல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வரும் 11-ம் தேதி மொஹாலியில் சந்திக்கிறது.

மேலும் குஜராத் லயன் அணிக்கான பாடல் விரைவில் வெளியிடப்பட்டும் என்றும் பன்சால் தெரிவித்தார்.

Leave a Reply