- சினிமா, செய்திகள்

அது ஏன், ஏன், ஏன்..?

 

`ஐ' படத்தில் அநியாயத்துக்கு உடம்பை ஏற்றி இறக்கி நடித்த விக்ரமுக்கு தேசிய விருது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு தமிழ் ரசிகர்களிடம் நிறையவே இருந்தது. ஆனால் விருது அமிதாப்புக்கு போய்விட்டது. தேர்வுக் கமிட்டியில் ஜூரியாக இருந்தவர்களில் ஒருவர் நம்ம ஊர் இசையமைப்பாளர் கங்கை அமரன். `அவர் இருந்துமா இப்படி?' என்ற கேள்வி பலருக்குள்ளும் எழ, கங்கை அமரனே இதற்கு பதில் சொல்லியிருக்கிறார். “ஐ படத்தை என்னால் பைனல் ரவுண்டு வரை கொண்டு வர முடியவில்லை. அனைத்தும் முடிந்த பிறகு தான் `ஐ' படத்தை பார்க்க எல்லோரிடமும் கூறினேன். ஆனால் அவர்கள் எல்லோரும் இதேபோல் இன்னொரு படத்தை குறிப்பிட்டு, `இதை மறுபடியும் பாருங்கள்' என்றார்கள். இதனால் நேரம் தான் வீணாகும் என்று அந்த முயற்சியை கைவிட்டு விட்டோம். படம் இறுதிச்சுற்று வரை வந்திருந்தால் நிச்சயம் விக்ரமுக்கு தேசிய விருது கிடைத்திருக்கும்.''

Leave a Reply