- உலகச்செய்திகள், செய்திகள்

அதிபர் ஒபாமா மீது டிரம்ப் கடும் தாக்கு அமெரிக்காவை கடன்கார நாடாக்கி விட்டார்…

கிளீவ்லாந்து, ஜூலை 23-

அதிபர் ஒபாமா அமெரிக்காவை கடன்கார நாடாக்கி விட்டார் என்றும்,   பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் யாருக்கும் இந்த நாட்டில் இடமில்லை எனவும் அமெரிக்க அதிபர் தேர்தலின் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் கூறினார்.

டொனால்ட் டிரம்ப் பேச்சு

கிளீவ்லாந்த் நாட்டில் நடைபெற்ற  நிகழ்ச்சி ஒன்றில்  அவர் பேசியதாவது-

அமெரிக்க அதிபர் தேர்தலின் ஜனநாயக  கட்சி வேட்பாளராக என்னை தேர்வு செய்ததை ஏற்றுக் கொள்கிறேன். குற்றங்களும்,  வன்முறையும்  நமது நாட்டையே பாதித்துள்ளது. இது விரைவில் முடிவுக்கு  கொண்டு வரப்படும். அமெரிக்காவில் வேலை வாய்ப்புக்களை நான் உருவாக்குவேன்.

இரக்கம் வேண்டாம்

மரணம், அழிவு,  பயங்கரவாதம், பலவீனம் ஆகியவைகளைத்தான் ஹிலாரி மரபாக கொண்டுள்ளார். அதனால் அவர் மீது  இரக்கம் காட்ட வேண்டாம். உலகமயமாதல் இல்லாத அமெரிக்க மயமாதலை மரபாக கொண்டு  வருவோம். ஐஎஸ் இயக்கத்தின் அராஜகத்தை முடிவுக்கு கொண்டு வருவோம்.

அமெரிக்க  அதிபராக உள்ள ஒபாமா அமெரிக்காவை ஏறக்குறைய கடன்கார நாடாக்கி விட்டார்.  பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் யாருக்கும் இந்த நாட்டில் இடமில்லை. எனது  தலைமையின் கீழ் அமெரிக்க மக்கள் உலகின் முதன்மையானவர்களாக வருவார்கள்.

நான்  உங்களுடன் இருப்பேன். உங்களுக்காக போராடுவேன். உங்களுக்காகவே வெற்றி  பெறுவேன். எனது ஆட்சியில் அதிகாரிகளை விட அமெரிக்க குழந்தைகளுக்கே  முக்கியத்துவம் அளிக்கப்படும். இந்த பிரசாரத்தில் பொய் ஏதும் இல்லை.

இவ்வாறு டிரம்ப் பேசினார்.

Leave a Reply