- செய்திகள்

அண்ணாமலையார் கோவிலில் மேகாலய கவர்னர் சுவாமி தரிசனம் திருவண்ணாமலை…

திருவண்ணாமலை,ஜூலை 26-
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மேகாலயா ஆளுநர் வி.சண்முகாநாதன்  சுவாமி தரிசனம் செய்தார்.
மேகாலய ஆளுநர்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு நேற்று  காலை 9.45 மணிக்கு மேகாலயா ஆளுநர் சண்முக நாதன், அம்மணி அம்மன் கோபுரம் வழியாக கோயிலுக்கு வந்தார்.
அப்போது கோவில் இணை ஆணையர் ஹரிபிரியா மற்றும் திருக்குறள் தொண்டு மையம் சார்பில் அவரை வரவேற்று சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பிரம்மதீர்த்த குளத்தில்..
அதன்பின்னர் அவர் முருகன் சன்னதி, ஆயிரங்கால் மண்டபம், பாதாள லிங்கம், அருணகிரிநாதர் கோபுரம் ஆகியவற்றை பார்வையிட்டார். பின்னர் கோவிலிலுள்ள பிரம்ம தீர்த்த குளத்தில் இறங்கி நீரை தலையில் தெளித்துக் கொண்டார்.
பிறகு விநாயகர், அண்ணாமலையார், உண்ணாமலையம்மனை வழிபட்டு அதன்பின்னர் நவக்கிரகங்களுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட்டார்.
கோவில் பிரசாதம்
அதனைத் தொடர்ந்து அவருக்கு கோவில் சார்பில் மாலையணிவித்து மரியாதை செலுத்தி பிரசாதம் வழங்கப்பட்டது.

படம் உண்டு

புட்நோட்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மேகாலயா ஆளுநர் வி.சண்முகநாதன் சாமி தரிசனம் செய்து விட்டு வந்த போது எடுத்த படம்.அருகில் கோவில் இணை ஆணையர் ஹரிபிரியா,கோட்டாட்சியர் உமாமகேஸ்வரி ஆகியோர் உள்ளனர்.

Leave a Reply