- செய்திகள், விளையாட்டு

அடுத்த 2 போட்டிகளில் கெயில் விளையாடமாட்டார்

 

மும்பை, ஏப்.20:-
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் முன்னணி வீரர் கிறிஸ் கெயில் குறைந்தபட்சம் அடுத்த இரண்டு போட்டிகளில் விளையாடமாட்டார் என்று அந்த அணியின் மற்றொரு ஆட்டக்காரர் சர்ஃப்ராஸ் கான் தெரிவித்துள்ளார்.
கெயிலுக்கு ஆண் குழந்தைப் பிறந்துள்ளதையடுத்து குழந்தையைக் காண அவர் சொந்த ஊரான ஜமைக்காவுக்கு சென்றுள்ளதால்  நாளை (இன்று) மும்பையில் நடக்க உள்ள போட்டியிலும் அதை அடுத்து புனேயில் நடக்க உள்ள போட்டியிலும் பங்கேற்கமாட்டார் என நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது கான் கூறினார்.
அதே சமயம் எத்தனை போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்பது உறுதியாக தெரியவில்லை.
இதனிடையே இன்று நடக்க உள்ள போட்டியில் கெயிலுக்கு பதிலாக கே. பொல்லாக் களம் இறங்க உள்ளார் என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்தார்.

Leave a Reply