- செய்திகள், மாநிலச்செய்திகள்

அஜித் ஜோகியிடம் விளக்கம் கேட்டு காங்கிரஸ் நோட்டீஸ் சட்டீஸ்கர் முன்னாள் முதல் அமைச்சர்

புதுடெல்லி, பிப்.7-

சர்ச்சைக்குரிய டேப் விவகாரம் குறித்து, சட்டீஸ்கர் முன்னாள் முதல்-அமைச்சர் அஜித் ஜோகியிடம் விளக்கம் கேட்டு, காங்கிரஸ் மேலிடம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது

வேட்பாளர் வாபஸ்

சட்டீஸ்கர் மாநிலம், அந்தகார் சட்டசபை தொகுதியில் கடந்த 2014-ம் ஆண்டில் இடைத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பா.ஜனதா வேட்பாளரை வெற்றி பெறச் செய்யும் வகையில், காங்கிரஸ் வேட்பாளர் வாபஸ் பெற வைக்கப்பட்டார்.

இதன் பின்னணியில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டீஸ்கர் மாநில முன்னாள் முதல்-அமைச்சர் அஜித் ஜோகி, அவருடைய மகனும் எம்.எல்.ஏ.வுமான அமித் ேஜாகி ஆகிய இருவரும் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

மகன் நீக்கம்

இந்த நிலையில், காங்கிரஸ் வேட்பாளரை வாபஸ் பெற வைப்பதற்காக பணம் கொடுத்து தூண்டியது தொடர்பான ‘ஆடியோ டேப்’ ஒன்று கடந்த மாதம் வெளியானது. இதில், அவர்கள் இருவருக்கும் இருந்த தொடர்பு குறித்து அம்பலமானது.

அதைத் தொடர்ந்து, அஜித் ஜோகியின் மகன் அமித் ஜோகி, கடந்த மாதம் காங்கிரசில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால், தங்கள் மீதான குற்றச்சாட்டை அவர்கள் இருவரும் மறுத்து வந்தனர்.

2 வாரத்தில் பதில்

இந்த நிலையில், ஏ.கே.அந்தோணி தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு, இந்த விவகாரம் குறித்து 2 வாரங்களுக்குள் பதில் அளிக்கும்படி, அஜித் ஜோகிக்கு இப்போது நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இதற்கிடையில், தான் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என்று, அமித் ஜோகி ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு மேல் முறையீடு செய்திருந்தார். இந்த மனுவை, மாநில காங்கிரஸ் கமிட்டிக்கு அனுப்பி வைக்க காங்கிரஸ் மேலிட ஒழுங்கு நடவடிக்கை குழு முடிவு செய்துள்ளது.

Leave a Reply