அஜித் ஜோடியாக யாமி கவுதம்?

‘நேர்கொண்ட பார்வை’ படத்தை அடுத்து அஜித் . எச்.வினோத் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடக்கிறது.
இந்த படத்துக்கு ‘வலிமை’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் விவரம் இன்னமும் அதிகார பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், அஜித் ஜோடியாக யாமி கவுதம் நடிக்கிறார் என தகவல் கிடைத்துள்ளது. ‘கவுரவம்’ மற்றும் ‘தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும்’ ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ள இவர், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி, இந்தி ஆகிய மொழிப் படங்களில் நடித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *