BREAKING NEWS

டாம் லாதம் சதம், நியூசிலாந்து முதல் நாள் ஆட்ட முடிவில் 173/3

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்டில் நியூசிலாந்து வீரர் டாம் லாதம் சதம் அடிக்க, முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்துள்ளது.நியூசிலாந்து – இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று ஹாமில்டனில் தொடங்கியது.

டாஸ் ஜெயித்த இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர் ஜீத் ராவல் 5 ரன்னிலும், கேப்டன் கேன் வில்லியம்சன் 4 ரன்னிலும் அவுட் ஆனார்கள். அந்த அணி 39 ரன்னுக்கு 2 விக்கெட்டை இழந்தது.அதன்பிறகு மற்றொரு தொடக்க வீரர் டாம் லாதம் ராஸ் டெய்லர் ஜோடி சிறப்பாக விளையாடியது. டெய்லர் 53 ரன் எடுத்து அவுட் ஆனார்.சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டாம் லாதம் சதம் அடித்தார்.

இது அவருக்கு 11-வது சதம் (47 டெஸ்ட்) ஆகும். நியூசிலாந்து அணி 54.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 173 ரன் எடுத்திருந்தபோது மழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் அத்துடன் முதல்நாள் ஆட்டம் முடித்து கொள்ளப்பட்டது. டாம் லாதம் 101 ரன்னுடனும், நிகோல்ஸ் 5 ரன்னுடனும் களத்தில் உள்ளது




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *