BREAKING NEWS

“மராட்டியத்தின் மீது பாஜக நடத்திய துல்லிய தாக்குதல் இது”

திடீர் என்று பாஜக ஆட்சி அமைத்தது குறித்து மராட்டியத்தின் மீது பாஜக நடத்திய துல்லிய தாக்குதல் இது என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறி உள்ளார்.தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மற்றும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.அப்போது உத்தவ் தாக்கரே கூறியதாவது:பாஜக இதுவரை வாக்கு இயந்திரத்தை வைத்து விளையாடியது. இது பாஜகவின் புதுமாதிரியான விளையாட்டு.

தற்போது தேர்தல்கள் கூட தேவை இல்லை என நான் நினைக்கிறேன். சத்ரபதி சிவாஜி மகாராஜ் காட்டிக் கொடுத்து பின்னால் இருந்து தாக்கப்பட்டபோது என்ன செய்தார் என்பது அனைவருக்கும் தெரியும்.அரசியலமைப்பு சட்டமும், மக்கள் நம்பிக்கையும் கேலிக்கூத்தாகி விட்டது. நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக ஆட்சி கவிழ்ந்துவிடும்.

பாஜக போலியான இந்துத்துவாவை கடைபிடிக்க முயல்கிறது.என்னை பொருத்தவரை உண்மையான அரசியல் யுத்தம் தொடங்கி விட்டது. இது மராட்டியத்தின் மீது பாஜக நடத்திய துல்லிய தாக்குதல். முதன் முறையாக இந்த தேசம் இப்படி ஒரு நிலையை பார்க்கிறது. சிவசேனா எம்.எல்.ஏக்களை அவர்கள் இழுத்து பார்க்கட்டும். மராட்டியம் இனி தூங்காது என கூறினார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *