உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கு பிறமொழி திணிப்பில் விருப்பம் இல்லை

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கு பிறமொழி திணிப்பில் விருப்பம் இல்லை என்று தி.மு.க. எம்.எல்.ஏ. தங்கம் தென்னரசுவிற்கு அமைச்சர் பாண்டியராஜன் பதிலளித்துள்ளார்.இதுதொடர்பாக, தமிழக தமிழ்த்துறை அமைச்சர் பாண்டியராஜன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-விருப்பம் இல்லைஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்கள் தமிழ்மொழியின் வளமையையும் அதன் சிறப்புகளையும் பிறமொழியினரிடையே எடுத்துக்கூறி கருத்துப் பரிமாற வசதியாக, அம்மொழிகளில் புலமை பெற்ற சிறந்த மொழி ஆசிரியர்களைக் கொண்டு சிறப்பு மொழிப் பயிற்சி ஆண்டுதோறும் அளிக்கப்படும்.

இவ்வாண்டு தொடக்கமாக தமிழாராய்ச்சி மாணவர்களின் விருப்பப்படி இந்திய மொழிகளில் முதல் மொழியாக இந்தியும், உலக மொழிகளில் பிரெஞ்சு மொழியும் தேர்ந்தெடுக்கப்பட்டு 2-ந் தேதி தொடங்கப்பட்டு வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன இதில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கு எவ்விதமான பிறமொழி சார்ந்த விருப்போமோ, ஆர்வமோ, திணிப்போ அறவே இல்லை.

தமிழ் காக்கும் அ.தி.மு.க.தமிழ் வளர்ச்சித் துறை தமிழ் அழிப்புத் துறையாக மாறி வருகிறது என்ற குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ள முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, 1990ல் கருணாநிதியின் சங்க இலக்கியங்களை இந்தி மொழியில் மொழி பெயர்க்கவும், 2000ல் தென்பாண்டி சிங்கம் கதையினை இந்தி மொழியில் மொழி பெயர்க்கவும், குமரிமுனையில் பயணிகளுக்குத் திருக்குறளை இந்தியில் மொழிபெயர்த்து வழங்கிடவும் ஆணையிட்டத்தை எண்ணிப்பார்க்கவும்.

தமிழ்நாட்டில் மய்ய அரசின் அனைத்து விளம்பரங்களும் இந்தி எனும் நிலையில் அன்றைய அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அரி சட்டசபையில் கவனஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தபோது, அன்றைய முதல்வர் கருணாநிதி இந்தியில் மட்டும் விளம்பரம் என்றால் என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது. இது எங்கள் கவனத்திற்கு வரவில்லை. அ.தி.மு.க. எங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்து மொழிக் காப்புப் பணியில் உள்ளது என்பதை எண்ணும்போது மகிழ்கிறேன் என்றார்.

இருமொழிக் கொள்கையில் ஆளும் கட்சியாக இருந்தாலும், எதிர்க் கட்சியாக இருந்தாலும் தமிழ்க்காக்கும் தளத்தில் அ.தி.மு.க.வுக்கு நிகர் அ.தி.முக தான்.பிறமொழியை தெரிந்து கொள்ளக்கூடாதா?தமிழ் வளர்ச்சித் துறையில் தி.மு.க. காலத்தில் திட்டங்களே இல்லை. இன்றோ 2012 முதல் இன்று வரை 479 கோடி 52 இலட்சத்து 81 ஆயிரம் கோடியில் திட்டங்கள் தீட்டி அனைத்தையும் நிறைவேற்றம் செய்திருக்கிறோம். இந்நிறுவனத்தில் பயிலும் மாணவர்கள் தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள்.

இவர்கள் வேறொரு மொழியை அறிந்து கொண்டால் அவர்தம் பணியில் சிறந்து விளங்குவார்கள் என்பதால்தான் இத்திட்டத்தை தங்கம் தென்னரசு நகையாடுகிறார்கள். ஏன் இவர்கள் மற்றவர்களோடு போட்டிப்போட்டு உயரும் வண்ணம் பிறமொழியை தெரிந்து கொள்ளக்கூடாதா? தமிழாய்வு மாணவர்களை சிறந்த பன்மொழி வல்லுநர்களாக இலக்கிய ஒப்பாய்வு அறிஞர்களாக உருவாக்குவதே அரசின் லட்சியம். இந்த இலட்சியத்திற்கும் தமிழ் வளர்ச்சிக்கும் என்றைக்கும் தடை போடும் பாதையில் தொடர்ந்து தி.மு.க. பயணிக்கிறது.

தி.மு.க. தமிழாய்வு மாணவர்கள் வேற்று மொழி அறிவு பெற்று பொருளாதாரத்தில் வளர்ந்து விடக்கூடாது என்பதற்கு முட்டுக் கட்டைபோட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *