BREAKING NEWS

அருங்காட்சியகத்தில் விஜய்யின் மெழுகு சிலை

இந்திய சுற்றுலா தளங்களில் முக்கிய பகுதி கன்னியாகுமரி . அந்த மாவட்டத்தில் ரயில் நிலையம் அருகே அமைந்துள்ளது மாயாபுரி- மெழுகு சிலை அருங்காட்சியகம்
ஏற்கனவே அந்த அருங்காட்சியகத்தில் அப்துல்கலாம், மைக்கேல் ஜாக்சன், பாரக் ஓபாமா, சார்லின் சாப்ளின், கர்நாடக இசை பாடகி எம்எஸ் சுப்புலெட்சுமி, ரவீந்திரநாத் தாகூர், மன்மோகன் சிங் உள்ளிட்ட பிரபலங்களுக்கு சிலை வைக்கப்பட்டுள்ளன.
இதேபோல் மோகன்லால், ஷாருக்கான், அமிதாப் பச்சன் போன்ற பல்வேறு திரையுலக பிரபலங்களின் மெழுகு சிலைகளும் இங்கு இடம்பெற்றுள்ளன.
அந்த வரிசையில் இப்போது நடிகர் விஜய்க்கு இந்த அருங்காட்சியகத்தில் ‘மெழுகு சிலை‘ வைக்கப்பட்டுள்ளது
தமிழ் நடிகர் ஒருவருக்கு இங்கு மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறை. இதனை குமரி நெல்லை மாவட்ட விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் திறந்து வைத்தனர்.
விஜய்க்கு வைக்கப்பட்டுள்ள மெழுகு சிலையை காண ஏராளமானோர் அருங்காட்சியகத்துக்கு சென்று வருகிறார்கள்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *