பொட்டு‘ படத்தின் வெற்றிக்கு பிறகு ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தற்போது ஆண்ட்ரியா நடிக்கும் ” கா ” படத்தை தயாரித்து வருகிறார்கள். ” கா ” என்றால் இலக்கியத் தமிழில் காடு, கானகம் என்று பொருள்படும்.
கொடிய மிருகங்கள் வாழும் காட்டுப் பகுதிகளுக்கு சென்று அவற்றின் வாழ்க்கை முறைகளையும் மற்றும் குணாதிசயங்களையும் பதிவு செய்யும் ‘வைல்ட் லைஃப்‘‘ போடோகிராபர் கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ளார்.. சலீம்கோஸ் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி நாஞ்சில் இயக்கியுள்ள இப்படத்துக்கு அறிவழகன் ஒளிப்பதிவு செய்ய அம்ரிஷ் இசை அமைக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் நாஞ்சில் கூறுகையில்,‘‘முழுக்க முழுக்க காட்டை மையமாக வைத்து இந்த படத்தை உருவாக்கி வருகிறோம். இதற்கு முன்பு மூணாரில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் இரவு நேரத்தில் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது, அப்போது யாரும் எதிர்பாராத விதமாக அங்கு யானை ஒன்று வந்துவிட்டது. அங்கிருந்த நாங்கள் அனைவரும் பயந்து ஒழிந்துகொண்டோம் நல்ல வேலையாக எங்களுடன் இருந்த வனக்காப்பாளர் அந்த யானையை விரட்டி எங்களை காப்பாற்றினார்கள் ‘‘என்றார்.

Previous Postசுசீந்திரன் இயக்கத்தில் ‘சாம்பியன்’
Next Postமன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம் ~ 11‘‘வாழ்வு தந்த வள்ளலே..!’’