BREAKING NEWS

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்

ரூ.1000 ரொக்கத்துடன் கூடிய அரிசி, சர்க்கரை, கரும்பு, முந்திரி அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார். மேலும், இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார். பொங்கல் பரிசுத் தொகுப்பு பொங்கல் திருநாளை முன்னிட்டு, கடந்தாண்டை போல அரிசி அட்டை வைத்துள்ள குடும்பங்கள் அனைத்திற்கும், தலா 1000 ரூபாயுடன், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை அத்துடன் கரும்பு, முந்திரி, உலர்ந்த திராட்சை, ஏலக்காய் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கள்ளக்குறிச்சி மாவட்ட தொடக்க விழாவில் அறிவித்தார்.

முதல்வர் தொடங்கி வைத்தார்அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களின் குடும்பங்கள் பயன்பெறும் வகையில், குடும்பம் ஒன்றிற்கு 1000 ரூபாயுடன், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர்ந்த திராட்சை, 5 கிராம் ஏலக்காய் மற்றும் இரண்டு அடி நீளக் கரும்புத்துண்டு அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கும் திட்டத்தை, முதலமைச்சர் நேற்று 16 அரிசி குடும்ப அட்டைதாரர்களின் குடும்பங்களுக்கு வழங்கி, இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டத்திற்காக தமிழ்நாடு அரசு ஏற்கனவே ரூ.2,363.13 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.ே

வட்டி, சேலை வழங்கும் திட்டம்கைத்தறி நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்காக, 1983-ம் ஆண்டு எம்.ஜி.ஆரால் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இதன்படி, ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளையொட்டி விலையில்லா வேட்டிகள் மற்றும் சேலைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், 2020-ம் ஆண்டு 484 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் 1 கோடியே 67 லட்சம் வேட்டிகள் மற்றும் சேலைகள் வழங்கிடும் திட்டத்தை துவக்கி வைக்கும் அடையாளமாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று 16 குடும்பங்களுக்கு விலையில்லா வேட்டிகள் மற்றும் சேலைகள் வழங்கி திட்டத்தினை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் பங்கேற்றனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *