BREAKING NEWS

தென்காசி புதிய மாவட்டம் உதயமாகிறது

தென்காசியில் இன்று நடைபெறும் விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு தென்காசி புதிய மாவட்டத்தை துவக்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.நெல்லை மாவட்டத்தினை இரண்டாகப் பிரித்து தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்கப்படும் என சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனி சாமி கூறினார். இதனையடுத்து தென்காசி புதிய மாவட்டம் அமைப்பதற்கான பணிகள் துவங்கின. தென்காசி, செங்கோட்டை, ஆலங்குளம், வீரகேரளம்புதூர், கடையநல்லூர், சிவகிரி, சங்கரன்கோவில், திருவேங்கடம் ஆகிய 8 தாலுகா பகுதிகளை கொண்டதாக தென்காசி மாவட்டம் அமைக்கப்பட்டது. சங்கரன்கோவிலில் புதிதாக கோட்டாட்சித்தலைவர் அலுவலகம் அமைக்க அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில் தென்காசி புதிய மாவட்ட துவக்க விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று (22ம் தேதி) காலை 9.30 மணிக்கு தென்காசி இசக்கி மஹால் வளாகத்தில் நடைபெறுகிறது. விழாவிற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை தாங்கி புதிதாக தோற்றுவிக்கப்பட்ட தென்காசி மாவட்டத்தை துவக்கி வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை துவக்கி வைத்து, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார். துணை முதல்வர் பன்னீர் செல்வம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, தகவல் தொழில்நுடபவியல் துறை அமைச்சர் உதயகுமார், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

அரசு தலைமைச் செயலாளர் சண்முகம் வரவேற்று பேசுகிறார்.விழாவில் தமிழக அமைச்சர்கள், எம்.பி.,கள் விஜிலா சத்தியானந்த், முத்துக்கருப்பன், வைகோ, எம் குமார், ஞானதிரவியம், எம்.எல்.ஏ.,கள் செல்வமோகன்தாஸ் பாண்டியன், முருகையா பாண்டியன், இன்பதுரை, மனோகரன், நாராயணன், மைதீன்கான், லெட்சுமணன், பூங்கோதை ஆலடிஅருணா, முகமது அபுபக்கர், அரசு முதன்மை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிரு~;ணன், நெல்லை மாவட்ட கலெக்டர் சில்பா பிரபாகர் மற்றும் பலர் வாழ்த்தி பேசுகின்றனர்.

முடிவில் தென்காசி மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் நன்றி கூறுகிறார்.விழா நடைபெறும் பகுதியில் அலங்கரிக்கப்பட்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. மேடைக்கு முன் பயனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு துறையினர் அமர்வதற்கு மெகா பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இவர்களுக்காக குடிநீர் வசதி மற்றும் தற்காலிக கழிப்பறை வசதி செய்யப்பட்டுள்ளது.

மருத்துவ குழுவினரும், தீயணைப்பு மற்றும் மீட்புபணி துறையினரும் விழா மேடை அருகே தயார் நிலையில் உள்ளனர். விழாவில் பயனாளிகள் வந்து செல்ல சிறப்பு வாகன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.பாதுகாப்பு ஏற்பாடுகளை தென்மண்டல ஐ.ஜி., சண்முக ராஜேஸ்வரன் தலைமையில் நெல்லை சரக டி.ஐ.ஜி.,பிரவீன்குமார் அபிநபு, எஸ்.பி.,கள் நெல்லை ஓம் பிரகா~; மீனா, தென்காசி சுகுணாசிங் ஆகியோர் மேற்பார்வையில் போலீசார் செய்து வருகின்றனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *